கீழே கிடந்த தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த வியாபாரி


கீழே கிடந்த தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த வியாபாரி
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தகட்டூரில் கீழே கிடந்த தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த வியாபாரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் கடைத்தெரு தென்னடார் செல்லும் சாலையில் 8 கிராம் மதிப்புள்ள தங்க சங்கிலி சாலையில் கீழே கிடந்தது உள்ளது. இதனை கண்ட அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள செந்தில் எடுத்து வர்த்தக சங்கத்தின் மூலம் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தங்க நகையை தவற விட்ட பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவர் உரிய ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்து நகையை பெற்றுக்கொண்டார்.நகையின் உரிமையாளர் முனியப்பன் நகையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த பழ வியாபாரி செந்திலின் நேர்மையை பாராட்டி ரூ. 3 ஆயிரத்தை பரிசாக வழங்கினார். முதலில் அந்த பணத்தை செந்தில் வாங்க மறுத்தார். பின்னர் அந்த பணத்தை வாங்கிய செந்தில், தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக அந்த பணத்தை கொடுத்தார்.கீழே கிடந்த நகையை போலீசாரிடம் ஒப்படைத்த செந்திலின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story