லாரி மோதி வியாபாரி உடல் நசுங்கி பலி
லாரி மோதி வியாபாரி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் விளந்தை கிராமம் தியாகராஜ நகரை சேர்ந்தவர் பக்தவச்சலம்(வயது 68). பட்டு நூல் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு கல்லாத்தூர் மெயின்ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று, பட்டுநூல் கொடுத்தவர்களிடம் பணம் வசூல் செய்துவிட்டு சாலையோரமாக தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி தைல மரக்கட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி பக்தவச்சலம் மீது மோதியது.
இதில் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப் - இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பக்தவச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.