என்ஜின் பழுதால் நடுவழியில் ரெயில் நின்றது


என்ஜின் பழுதால் நடுவழியில் ரெயில் நின்றது
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:46 PM GMT)

என்ஜின் பழுகி நடுவழியில் ரெயில் நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்

சிவகங்கை

சிவகங்கை

திருச்சியிலிருந்து சிவகங்கை வழியாக ராமநாதபுரம் செல்லும் பயணிகள் ரெயில் தினசரி காலை 9.15 மணிக்கு சிவகங்கை ரெயில் நிலையத்திற்க்கு வரும் அதன்பின் மானாமதுரை, பரமக்குடி, வழியாக ராமநாதபுரம், செல்லும். இந்நிலையில் நேற்று காலை 9.15 மணிக்கு சிவகங்கை ரெயில் நிலையம் வந்த பயணிகள் ரெயில் 9.17 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது. சிறிது தூரம் சென்றவுடன் திடீரென என்ஜின் கோளாறு காரணமாக ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து மற்றொரு என்ஜின் மூலம் சிவகங்கை ரெயில் நிலையத்திற்கு பின்னோக்கி இயக்கப்பட்டு வந்து சேர்ந்தது. ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் ராமநாதபுரத்திலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு அந்த ரெயிலுடன் இணைக்கப்பட்டு அதன்பின் பாம்பனுக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயனிகள் மிகுந்த சிரமத்திற்காளாகினர்.


Next Story