பர்கூர் அருகேபுளிய மரக்கிளை சாலையில் முறிந்து விழுந்தது


பர்கூர் அருகேபுளிய மரக்கிளை சாலையில் முறிந்து விழுந்தது
x
கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூரில் திருப்பத்தூர் சாலையில் உள்ள மல்லப்பாடி ஓம் சக்தி கோவில் அருகில் 100 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் இருந்தது. இந்த மரம் நேற்று திடீரென சாலையில் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து புளிய மரத்தை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர். சாலையில் மரம் விழுந்தபோது போக்குவரத்து இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story