சூறைக்காற்றில் மரம் விழுந்தது


சூறைக்காற்றில் மரம் விழுந்தது
x

அருமனை அருகே சூறைக்காற்றில் மரம் விழுந்தது போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி

அருமனை,

அருமனை அருகே உள்ள மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் பால் வடிப்பு தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசி வருவதால் மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், நேற்று மதியம் கடையாலுமூடு, சிற்றாற்றின்கரை பகுதியில் சூறைக்காற்று வீசியது. இதில் ஒரு பெரிய புளியமரம் வேருடன் சாய்ந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் சேதம் அடைந்தது. இதனால், அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இதையடுத்து களியல் மின்வாரிய ஊழியர்களும், பொதுமக்களை இணைந்து மரத்தை வெட்டி அகற்றி, மின்பாதையை சீரமைத்தனர். அதன்பின்பு போக்குவரத்து சீரானது.



Next Story