சாதிச்சான்று, வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் சங்கத்தினர் போராட்டம்


சாதிச்சான்று, வீட்டுமனை பட்டா கேட்டு    பழங்குடி மக்கள் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாதிச்சான்று, வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், மாநில பொதுச்செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

இதற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ராமசாமி, சின்னசாமி, சுப்பிரமணியன், கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து ஆதியன் (பழங்குடியினர்) சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் விசாரணையின்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டத்தை திரும்ப பெற வேண்டும், சாதிச்சான்றிதழ் மற்றும் வீட்டுமனைப்பட்டா வழங்குதல், தாட்கோ மூலம் கடன் பெற வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் கடன் தர மறுக்கும் வங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இதில் நிர்வாகிகள் மற்றும் பூம்பூம்மாட்டுக்கார மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story