மின்கம்பி உரசியதால் லாரி தீப்பற்றி எரிந்தது


மின்கம்பி உரசியதால் லாரி தீப்பற்றி எரிந்தது
x

மின்கம்பி உரசியதால் லாரி தீப்பற்றி எரிந்தது.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள ஆண்டிமடம்-ஸ்ரீமுஷ்ணம் நெடுஞ்சாலையில் ராங்கியம் பஸ் நிறுத்தம் அருகே நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் சாலை அமைக்க தேவையான ஜல்லிக்கற்களை டாரஸ் லாரி மூலம் கொண்டு வந்து தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் இரவு இறக்கிக்கொண்டிருந்தார். அதற்காக ஹைட்ராலிக் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. அந்த எந்திரம் உயர் மின் அழுத்த கம்பியில் எதிர்பாராத விதமாக உரசியதால் லாரி தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து லாரி டிரைவர் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் சிங், லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இது பற்றி அப்பகுதி மக்கள், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக உயர் மின்னழுத்த பாதையில் மின்சாரத்தை நிறுத்தினர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து லாரியின் டீசல் டேங்க் தீப்பிடித்து வெடிக்காமல் இருக்க கெமிக்கலுடன் கூடிய நுரை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர். லாரியின் அருகில் பொதுமக்கள் செல்லாமல் இருக்க ஆண்டிமடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story