தடுப்பு சுவரில் லாரி மோதி டிரைவர், கிளீனர் காயம்
தொப்பூர் கணவாயில் தடுப்பு சுவரில் லாரி மோதி டிரைவர், கிளீனர் காயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரு லாரி தர்மபுரி வழியாக நேற்று காலை வந்தது. இந்த லாரியை அரவாக்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலு (வயது50) ஓட்டி வந்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (40) கிளீனராக உடன் வந்தார். தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்ற மற்றொரு லாரி மீது உரசி தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் லேசான காயம் அடைந்தனர்.. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.