சாலை தடுப்பில் மோதி நின்ற லாரி


சாலை தடுப்பில் மோதி நின்ற லாரி
x

வேலூரில் லாரி ஒன்று சாலை தடுப்பில் மோதி நின்றது.

வேலூர்

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது 9 மணி அளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி லாரி சாலை தடுப்புகள் மீது ஏறியது. அப்போது அதில் இருந்த மின்கம்பம்மீது மோதி நின்றது. இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பத்தை அகற்றினர். மேலும், விபத்தில் சிக்கிய லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story