லாரி கவிழ்ந்தது


லாரி கவிழ்ந்தது
x

நீடாமங்கலம் அருகே காலிபாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.

திருவாரூர்

சென்னையிலிருந்து காலிபாட்டில்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கர்ணாவூர் மதுபான ஆலைக்கு இந்த லாரி நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி சாலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தட்டி இடும்பன்கோவில் அருகில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் வலதுபுற தடுப்பில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்து, அருகில் இருந்த பனை மரத்தில் லாரி சாய்ந்து நின்றது. இதில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியின் டிரைவர் காயமின்றி தப்பினார்.


Next Story