மின்கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது
மின்கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்த விபத்தில் மாடு பலியானது
சிவகங்கை
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சிவபெருமாள் அய்யனார் கோவில் அருகில் நேற்று அதிகாலை காரைக்குடி புதுவயலில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரிசி ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. லாரியை நத்தம் பகுதியை சேர்ந்த அப்பாஸ் ஓட்டினார். இந்நிலையில் லாரி காரைக்குடி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த மாட்டின் மீது மோதியது. மேலும் நிற்காமல் சென்ற லாரி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
Related Tags :
Next Story