மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி


மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி
x

மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார்.

மதுரை

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள டி.குன்னத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன் (வயது 35). இவர் தண்ணீர் லாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வி.அம்மாபட்டியில் இருந்து லாரியில் தண்ணீர் ஏற்றிக்கொண்டு திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் டி.குன்னத்தூர் அருகே செந்தூர் பாண்டியன் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் லாரி மோதியது. இதனால் சாலையின் கீழ்புறம் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் செந்தூர்பாண்டியன் படுகாயம் அடைந்து இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story