மலைப்பாதை தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது


மலைப்பாதை தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது
x

பேரணாம்பட்டு அருகே மலைப்பாதை தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேலூர்

கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு 25 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப்பல்லி கிராமத்தை சேர்ந்த டிரைவர் தமிழ் (30) என்பவர் லாரியை ஓட்டி சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழக எல்லையான பத்தலப்பல்லி மலைப்பாதை வளைவில் வந்த போது பிரேக் பிடிக்காததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி சேதமடைந்தது. லாரி டிரைவர் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி உயிர் தப்பினார். அருகில் உள்ள 200 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்திருந்தால் மிகப்பெரிய விபத்தாக மாறியிருக்கும்.

இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story