ஆத்தூர் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் பாரத்துடன் லாரி எரிந்து நாசம்


ஆத்தூர் அருகே  மின்கம்பி உரசியதில் வைக்கோல் பாரத்துடன் லாரி எரிந்து நாசம்
x

ஆத்தூர் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் பாரத்துடன் லாரி எரிந்து நாசமானது.

சேலம்

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). இவருக்கு சொந்தமான மினி லாரியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றி, ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரம் செய்வது வழக்கம். இதே போல நேற்று மதியம் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு ஆத்தூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி என்ற இடத்தில் மினிலாரி வந்தது. அப்போது அந்த பாதையில் சென்ற, மின்சார கம்பியில் வைக்கோல் லோடு உரசியது.

இதில் தீப்பிடித்து தீ மளமளவென பரவி மினி லாரி முழுவதும் எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ விபத்தில் வைக்கோல் பாரத்துடன், லாரியும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. விபத்து குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story