உத்தமர்கோவில் வைகாசி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


உத்தமர்கோவில் வைகாசி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

உத்தமர்கோவில் வைகாசி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், ஜூன்.4-

திருச்சி நெ.1டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், மும்மூர்த்திகள் முப்பெரும் தேவிகளுடன் எழுந்தருளிய உத்தமர்கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு நந்தி பகவான் படம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொடி புறப்பாடு கண்டு கோவில் உள் பிரகாரத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க பிச்சாண்டேஸ்வரர் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து தினமும் பிச்சாண்டேஸ்வரர் சூர்ய பிரபை, பூத வாகனம், சேஸ் வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


Next Story