மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது


மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது
x

திருவண்ணாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே உள்ள பண்டிதப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51), தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆணாய்பிறந்தான் கிராமத்தை நோக்கி சென்று உள்ளார். லோகநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஆணாய்பிறந்தான் புறவழிச்சாலையில் செல்லும் போது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியது.

இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story