வேன் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்


வேன் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
x

நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி, பாஸ்கர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஒரு வேனில் சென்று விட்டு, நேற்று ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

வேனை கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியை சேர்ந்த கமாலுதீன் என்பவர் ஓட்டினார். நெல்லை அருகே கங்கைகொண்டான் சோதனை சாவடி பகுதியில் வரும் போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் கமாலுதீன், பாஸ்கர் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்து காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story