தொண்டிக்கு வந்த வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினர்
தொண்டிக்கு வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினர் வந்தனர்.
தொண்டி,
கன்னியாகுமரி மாவட்டம் புதூரைச் சேர்ந்த 85 பெண்கள் கொண்ட குழுவினர் ஊதா நிற சேலை அணிந்து மாதாவின் பாடல்களை பாடிக்கொண்டு வேளாங்கண்ணி மாதா சொரூபம் தாங்கிய தேருடன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றனர். இந்த குழுவினர் நேற்று தொண்டிக்கு வருகை தந்தனர்.
இந்த குழுவினருக்கு வழிகாட்டியான விஜி கூறியதாவது:-
கோட்டார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் புதூரைச் சேர்ந்த 85 பெண்கள் அங்குள்ள புனித லூசியால் ஆலயத்திலிருந்து கடந்த 10-ந்தேதி வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டோம். வருகிற 28-ந் தேதி வேளாங்கண்ணி சென்றடைவோம். அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு செய்து ஊர் திரும்ப உள்ளோம் என்றும் நாங்கள் செல்லும் வழிகளில் உள்ள தேவாலயங்களில் கலந்து கொண்டு சிறப்பு ஜெபம் செய்து வழிபட்டு விட்டு புறப்பட்டு செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.