கால்நடை ஆஸ்பத்திரியை புதுப்பிக்க வேண்டும்


கால்நடை ஆஸ்பத்திரியை புதுப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் கால்நடை ஆஸ்பத்திரியை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் கால்நடை ஆஸ்பத்திரியை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கால்நடை ஆஸ்பத்திரி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. பூம்புகார், வானகிரி, நெய்தவாசல், கீழையூர், பழையகரம், மேலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு இந்த ஆஸ்பத்திரி மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் இங்கு கால்நடைகளுக்கு ஊசி மூலம் செயற்கை கருவூட்டல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினந்தோறும் இங்கு கால்நடை மருத்துவர் மற்றும் பணியாளர் ஆகியோர் மருத்துவ பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டிடம் பழுது

இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது மழைக்காலங்களில் கட்டிடத்தில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. மேலும் தரைதளம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் அங்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பூம்புகாரை சேர்ந்த கண்ணன் கூறுகையில், 'பூம்புகார் கால்நடை ஆஸ்பத்திரி மூலம் விவசாயிகள் மிகவும் பயன்பட்டு வருகின்றனர். இந்த கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை புதுப்பித்து, புதிய பொலிவோடு இயங்க செய்ய வேண்டும்' என்றார்.


Next Story