சுவர் இடிந்து விழுந்து பெண் பலி


சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
x

திருச்சுழி அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார்.

விருதுநகர்

திருச்சுழி

திருச்சுழி அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்த அர்ச்சுனனின் மனைவி செல்லத்தாய் (வயது52). இந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது வீட்டிற்கு முன்னால் இருக்கும் பழைய கட்டிடத்தில் செல்லத்தாய் சமையல் செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில் சுவர் இடிந்து விழும் சத்தம் கேட்டது. உடனே அனைவரும் சென்று பார்த்தனர். அப்போது சமையல் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்குள் செல்லத்தாய் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், செல்லத் தாய் இறந்துவிட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story