மேச்சேரி பகுதியில் பலத்த மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி


மேச்சேரி பகுதியில் பலத்த மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
x

மேச்சேரி பகுதியில் பெய்த பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்

சேலம்

மேச்சேரி:

மேச்சேரி அருகே உள்ள சின்ன சாத்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 76). இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது கோவிந்தம்மாள் தனது வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். மழையினால் வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து கோவிந்தம்மாள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்குள் இருந்த கோவிந்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story