மழையால் 2 வீடுகளின் சுவர்கள் இடிந்தன
மழையால் 2 வீடுகளின் சுவர்கள் இடிந்தன.
பெரம்பலூர்
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரும்பாவூரை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் பாப்பா ஆகியோரின் கூரை வீடுகளின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் அந்த 2 வீடுகளில் வசித்த 6 பேர் அரும்பாவூர் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் படுக்கை வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
Related Tags :
Next Story