மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் குறைந்தது
x

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் குறைந்தது

சேலம்

மேட்டூர்,

இந்த ஆண்டு பருவ மழை தீவிரமடைந்த தன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த மாதம் 11-ந் தேதி மேட்டூர் அணை 120 அடி எட்டியது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்தது. இந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 120 அடிக்கு கீழே குறைய தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10,716 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனம் தேவைக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Next Story