மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.07அடியாக சரிந்தது...!


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.07அடியாக சரிந்தது...!
x

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 819 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 815 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 105.54 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 105.07அடியாக சரிந்தது.


Next Story