மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியாக குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியாக குறைந்தது
x

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக குறைந்துள்ளது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடிக்கும் கீழ் குறைந்துள்ளது. குறிப்பாக நேற்று அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 195 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இவ்வாறு நீர்வரத்து குறைவு காரணமாக அணை நீர்மட்டம் ெதாடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 9-ந் தேதி அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 108 அடியாக குறைந்தது. கடந்த 2 வாரங்களில் மட்டும் அணை நீர்மட்டம் 7 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story