மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியது


மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியது
x

மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியது.

சேலம்

மேட்டூர்:

தமிழகத்தில் கடந்த வாரம் பரவலாக கோடை மழை பெய்தது. இதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி கடந்த வாரம் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 5 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணை நீர்மட்டம் உயர்ந்தது. இந்தநிலையில் மழை பெய்வது முற்றிலும் நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கனஅடிக்கு கீழ் குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 103.91 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 103.87 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story