குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்


குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்
x

கொண்டபாளையத்தில் பழுதான குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அடுத்த கொண்ட பாளையத்தில் இருந்து பாணாவரம் மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் அருகே ஆழ்துளை கிணறு (கைப்பம்பு) மற்றும் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இது இறுதிசடங்குகளுக்கும், கால்நடை குடிநீருக்கு பயண்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைப்பம்பு பழுதானது. குடிநீர் தொட்டியை சமூக விரோதிகள் உடைத்து தொட்டி இருந்த இடமே இல்லாத அளவிற்கு சேதபடுத்தி உள்ளனர். இதனை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story