அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்


அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்
x

ஆரணி அருகே அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டு போட்டனர்

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே கனிகிலுப்பை கிராமத்தில் முறையாக அரசு அனுமதி பெறாமல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுமதி மூர்த்தி என்பவர் நடத்தி வருவதாகவும் கலெக்டர் முருகேசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், ஆரணி வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார் மற்றும் அலுவலர்கள் இன்று மாலை திடீரென சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது அரசு சார்பில் பெறவேண்டிய சான்றுகள் முறையாக இல்லாததால் அதிகாரிகள் சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்துக்கு பூட்டு போட்டனர்.

மேலும் வருகிற திங்கட்கிழமை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தங்களிடம் உள்ள அனைத்து சான்றுகளையும் கொண்டு வந்து சமர்ப்பித்து முறையாக இருந்தால் மட்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிலும் தங்களது சுத்திகரிப்பு நிலையம் அரசு நிர்ணயித்துள்ள அளவில் இல்லை, முறையாக பராமரிக்கக் கூடிய பணியாளர்கள் இல்லை,

தண்ணீர் வழங்குவதற்கான முறையாக கையாளப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

இதை அனைத்தையும் சரி செய்தால் மட்டுமே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story