தண்ணீர் தொட்டியில் இருந்த 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது


தண்ணீர் தொட்டியில் இருந்த 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது
x

தண்ணீர் தொட்டியில் இருந்த 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள பழைய மேட்டூரில் ஒரு ஆயில்மில் இயங்கி வருகிறது. இந்த மில்லின் பின்புறம் இருக்கும் ஒரு தோட்டத்தில் பெரிய நீர் தொட்டி உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் இந்த தொட்டியை எட்டி பார்த்தபோது அதில் பாம்பு இருப்பது தெரிந்தது. இதனால் பயந்துபோன அவர்கள் உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர். அப்போது அது சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு என்று தெரிந்தது. பின்னர் அதை ஒரு சாக்குப்பையில் போட்டு அந்தியூர் வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்று விட்டனர


Next Story