சக்கம்பட்டியில் நெசவாளர்கள் 8-வது நாளாக போராட்டம்


சக்கம்பட்டியில் நெசவாளர்கள் 8-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2023 11:10 PM IST (Updated: 8 Jan 2023 11:16 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெசவாளர்கள் போராட்டம்

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நெசவு தொழிலாளர்கள் தங்களுக்கு 50 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள் இடையே 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடிவுகள் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது.

இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் தினமும் ரூ.30 லட்சம் மதிப்பிலான காட்டன் சேலைகள், வேட்டிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தினக்கூலி வேலை செய்து வரும் நெசவாளர்களும் வருவாய் இன்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கஞ்சித்தொட்டி

இந்தநிலையில் நெசவாளர்களின் போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்தது. அதன்படி, சக்கம்பட்டியில் நெசவாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெசவாளர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் மற்றும் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டங்கள் அடுத்தக்கட்டமான நடத்தப்பட உள்ளதாக நெசவாளர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story