மாநகராட்சி குப்பை லாரியின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு


மாநகராட்சி குப்பை லாரியின்   சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
x

மாநகராட்சி குப்பை லாரியின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

மதுரை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஏ.வி. மேம்பாலத்தில் நேற்று மாநகராட்சி குப்பை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த லாரியின் பின்பக்க சக்கரம் கழன்று ஓடியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த சக்கரம் தனியாக விழுந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. இதே போல் லாரியின் டிரைவர், சாமர்த்தியமாக வாகனத்தை நிறுத்தியதால் அவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்.

ஆனால் மேம்பாலத்தில் நடுவே லாரி நின்றதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கு பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.


Next Story