தோட்டத்தில் காட்டு பன்றிகள் அட்டகாசம்; 300 வாழைகள் சேதம்


தோட்டத்தில் காட்டு பன்றிகள் அட்டகாசம்; 300 வாழைகள் சேதம்
x

திருக்குறுங்குடியில் தோட்டத்தில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்ததில் 300 வாழைகள் சேதம் அடைந்தன.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி கருத்தபத்து கீழக்காடு பகுதியில் உள்ள விளைநிலங்களில் கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள வாழை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் வாழை மரங்களை சாய்த்து அதன் குருத்துகளை தின்று சேதப்படுத்தின. இதில் லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயிகள் மிக்கேல்ராஜ் (45), அருள்ராஜ் (30) ஆகியோருக்கு சொந்தமான சுமார் 300 ஏத்தன் ரக வாைழகள் சேதமடைந்தன. இதுகுறித்து திருக்குறுங்குடி வனத்துறையினரிடம் விவசாயிகள் முறையிட்டனர். காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.


Next Story