The wildlife in the field is spectacular


The wildlife in the field is spectacular
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே வயலில் புகுந்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்தன.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே கல்யாணி அம்மன் கோவில் அருகே உள்ள வயல் பகுதிகள், சூரிய பாறை, ஆலமரம், குளத்து உள்வாய், வடபத்து, தென்பத்து, மேலகோணம், கீழகோணம், பட்டறைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெற்பயிர் நட்டுள்ளார்கள். அங்கு காட்டுப்பன்றிகள் வந்து நெற்பயிர்களை சேதம் படுத்திவிட்டு சென்று விடுகிறது. இதனால் வயலை சுற்றி சேலை கட்டி வைத்துள்ளனர். இருந்தாலும் காட்டுப்பன்றிகள், மிளா, மான் ஆகியவை நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், நெற்பயிர் பொதித்திரண்டு நன்றாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் காட்டுபன்றிகள் வந்து சேதப்படுத்தி விட்டு சென்று விடுகிறது. இதே போல் மான், மிளா ஆகியவையும் சேதப்படுத்திவிட்டு செல்கிறது. எனவே வனத்துறையினர் வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர்.


Next Story