விஷ வண்டுகள் கொட்டி பெண் சாவு


விஷ வண்டுகள் கொட்டி பெண் சாவு
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஷ வண்டுகள் கொட்டி பெண் சாவு

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே வாறுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான்றோஸ். இவருடைய மனைவி சாரதா(வயது 65). இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். இதனால், சாரதா கோழிகளுக்கு வாழை இலைகளை சேகரித்து உணவாக கொடுப்பது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று சாரதா ஆயினிவிளை பகுதியை சேர்ந்த இயேசுதாஸ் என்பவரின் வயலில் உள்ள வாழை மரங்களில் இருந்து இலைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது இலையின் அடிப்பகுதியில் மறைந்திருந்த விஷ வண்டுகள்(கடந்தை) சாரதாவை சரமாரியாக கொட்டியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாரதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாரதாவின் மகன் ஜான் ஜெயசிங்(40) கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story