மண்எண்ணெய் விளக்கு தீ பட்டதில்உடல் கருகி பெண் சாவு


மண்எண்ணெய் விளக்கு தீ பட்டதில்உடல் கருகி பெண் சாவு
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே மண்எண்ணெய் விளக்கு தீ பட்டதில் உடல் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே மண்எண்ணெய் விளக்கு தீ பட்டதில் உடல் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மண்எண்ணெய் விளக்கு தீ

திருவட்டாரை அடுத்த காட்டாத்துறை குட்டக்குழி காலனியைச் சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி சுலோச்சனா (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தங்கப்பன் இறந்து விட்டார்.

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சுலோச்சனாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு காலில் புண் ஏற்பட்டது. இந்த காயம் சரியாகாததால் அவர் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு கால்களிலும் நல்லெண்ணெய் தடவி விட்டு வீட்டுக்குள் நடந்து சென்றார். அப்போது மண்எண்ணெய் விளக்கில் அவருடைய கால் தட்டியது. இதனால் அவரும் கீழே விழுந்தார். மேலும் அவருடைய சேலையில் மண்எண்ணெய் விளக்கு தீ பட்டு குபீரென பிடித்தது.

பெண் உடல் கருகி சாவு

பின்னர் உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடல் கருகிய அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story