வெந்நீர் வைக்க அடுப்பு பற்ற வைத்தபோது தீப்பிடித்து பெண் சாவு


வெந்நீர் வைக்க அடுப்பு பற்ற வைத்தபோது தீப்பிடித்து பெண் சாவு
x
நாமக்கல்

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள சுங்கக்காரன் பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் மனைவி ரேகா (வயது 35). இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 25-ந் தேதி இவர் வீட்டில் வெந்நீர் வைக்க விறகு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது விறகு தீப்பிடிக்காததால் வீட்டிலிருந்த மண்எண்ணெயை எடுத்து ஊற்றியதாக தெரிகிறது. திடீரென எதிர்பாராத விதமாக ரேகாவின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரேகா இறந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story