விபத்தில் காயமடைந்த பெண் சாவு
இரணியல் அருகே விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
இரணியல் அருகே விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.
இரணியல்கோணம் அருகே கீழமணியன்குழி என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவருடைய மனைவி ஷர்மிளா (வயது 55). சம்பவத்தன்று இரவு ஷர்மிளாவும் அவரது சகோதரர் ராஜகேசவதாஸ் ஆகிய இருவரும் இரணியல்கோணம் பகுதியில் நடந்து சென்றனர். அப்போது, எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஷர்மிளா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷர்மிளா படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷர்மிளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story