விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு


விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு
x

ஜோலார்பேட்டை அருகே விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்பியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 58). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் தனது மனைவி சாரதாவுடன் (55) மொபட்டில் ஜோலார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

மேட்டுசக்கரகுப்பம் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு ஜீப், மொபட் மீது மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சாரதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கணவர் வேலு கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நீர் வளத்துறை ஜீப் டிரைவர் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story