போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி


போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
x

போலீசாரை கண்டித்து, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

மது பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாஜ். இவரது மனைவி யாஸ்மின் (வயது 44). இவர்களின் மகன் அப்சல் (25). இவர் மீது வெளி மாநில மதுபானங்கள் விற்றது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் அப்சல் வீட்டிற்கு போலீசார் செனறு சோதனை செய்த போது ரூ.2 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அப்சலை போலீசார் கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர். இதனால் அவரது தாயார் யாஸ்மின் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்டார். ஆனாலும் போலீசார் அப்சலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

தீக்குளிக்க முயற்சி

இதனால் ஆவேசம் அடைந்த யாஸ்மின் மண்எண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, போலீசார் எனது வீட்டிற்கு வரக்கூடாது எனவும், மகனை கைது செய்யக்கூடாது எனவும் கூறி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று யாஸ்மினை விசாரித்து எச்சரித்து அனுப்பினர்.

போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story