சமையல் செய்ய ஸ்டவ்வை பற்ற வைத்தபோது சேலையில் தீப்பிடித்ததால் உடல் கருகி பெண் பலி


சமையல் செய்ய ஸ்டவ்வை பற்ற வைத்தபோது சேலையில் தீப்பிடித்ததால் உடல் கருகி பெண் பலி
x

சமையல் செய்ய ஸ்டவ்வை பற்ற வைத்தபோது சேலையில் தீப்பிடித்ததால் உடல் கருகி பெண் பலியானாா்.

ஈரோடு

பவானி:

பவானியை அடுத்த பெருமாள்மலை ஆர்.என்.புதூர் குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (32). நேற்று முன்தினம் இரவு சமையல் செய்வதற்காக வீட்டில் உள்ள ஸ்டவ்வை சரண்யா பற்ற வைத்து உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய சேலையில் தீப்பற்றியது.

இதனால் அவருடைய உடலிலும் தீ பரவியது. தீப்பற்றியதும் வலியால் அவர் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று சரண்யா உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய நிலையில் காணப்பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரண்யா இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story