மனு கொடுக்க வந்த பெண் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


மனு கொடுக்க வந்த பெண் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண், திடீரென அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண், திடீரென அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு அளிக்க வந்த பெண்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கோரிக்க மனு அளிக்க வந்திருந்தனர். காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி கண்மணி (வயது 25) என்பவரும் மனு அளிக்க நேற்று காலை வந்தார்.

இந்நிலையில் திடீரென அவர் அரளி விதையை எடுத்து தின்றார். அப்போது, எனது சாவுக்கு காரணம் எனது வீட்டின் அருகில் வசிக்கும் நெப்போலியன் தான் என கூறினார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

மேலும் அவர் கொண்டு வந்த மனுவில், எனது வீட்டின் அருகே வசிக்கும் கண்ணன் மகன் நெப்போலியன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தொடர்ந்து எங்களிடம் பிரச்சினை செய்து வருகிறார். இதுகுறித்து குன்றக்குடி போலீஸ் நிலையத்தில் 3 முறை புகார் கொடுத்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றேன். மேலும் எனது சாவிற்கு காரணம் நெப்போலியன் தான் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இளம் பெண் ஒருவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story