ரெயிலில் அடிபட்டு இறந்த பெண் அடையாளம் தெரிந்தது


ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்  அடையாளம் தெரிந்தது
x

ரெயிலில் அடிபட்டு இறந்த பெண் அடையாளம் தெரிந்தது

ராணிப்பேட்டை

லத்தேரி ரெயில் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து விவரம் தெரியாத நிலையில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மனைவி பாரதி (வயது 55) என்பதும் தெரிய வந்தது. இவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரெயில்வே போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story