விஷத்தை குடித்த பெண் சாவு
வலங்கைமான் அருகே உணவு பொருள் என்று நினைத்து விஷத்தை குடித்த பெண் உயிரிழந்தார்.
வலங்கைமான், மார்ச்.29-
வலங்கைமான் அருகே உணவு பொருள் என்று நினைத்து விஷத்தை குடித்த பெண் உயிரிழந்தார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த தென்கரை குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா (வயது 53 ).இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு லதா வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) உணவு பொருள் என்று நினைத்து குடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்