கணவர் மீது வெந்நீர் ஊற்றிய பெண்


கணவர் மீது வெந்நீர் ஊற்றிய பெண்
x

கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறில் கணவர் மீது மனைவி வெந்நீர் ஊற்றினார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது ள32). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பிரியா (27) இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.தங்கராஜ் பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே கடந்த ஒரு மாதமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. .

இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் தங்கராஜ் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இரவு தங்கராஜ் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது மர்ம உறுப்பில் மனைவி பிரியா கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளார்.

இதில் துடித்து போன தங்கராஜீன் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story