மது விற்ற பெண் கைது
ஆலங்காயத்தில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் மேற்பார்வையில் ஆலங்காயம் போலீசார் பெத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டி கடை ஒன்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து 390 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டி கடையில் மது விற்ற கார்த்திகா (வயது 35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story