முதல்-அமைச்சர் சென்ற ரெயிலை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்திய பெண்
முதல்-அமைச்சர் சென்ற ரெயிலை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்தார். ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு தனி ரெயில் பெட்டியில் பயணம் செய்தார்.
ரெயில் திருவலம் அடுத்த முகுந்தராயபுரம் அருகே சென்றபோது பெண் பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் நின்றது. போலீசார் வந்து பெண் பயணியிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் ரெயில் மாறி ஏறி விட்டதால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாக கூறினார். இதனால் அவரை எச்சரித்த போலீசார் அவரை ரெயில் பெட்டியில் இருந்து இறக்கி விட்டனர்.
இதனால் சுமார் 5 நிமிடம் தாமதமாக ரெயில் சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story