தீ விபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி சாவு
தீ விபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலூர் சைதாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 60). இவர் சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்வதற்காக மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென அதில் இருந்து தீப்பொறி கிளம்பி மணியம்மாவின் புடவையில் பட்டு தீப்பற்றிக்கொண்டது. தீ மளமளவென அவரின் உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சென்று தீயை அணைத்தனர்.
பின்னர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் மணியம்மாவின் மகள் சாவித்திரி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.