போலீசுக்கு தெரியாமல் பெண்ணின் உடல் எரிப்பு; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
போலீசுக்கு தெரியாமல் பெண்ணின் உடல் எரிப்பு; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
மதுரை
பேரையூர், நவ.23-
பேரையூர் அருகே உள்ள கட்டாரபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 47). சம்பவத்தன்று சுப்பம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கணவர் முனியாண்டி, அதே ஊரை சேர்ந்த தங்கமுடி, ஈஸ்வரன், செல்வ முனியாண்டி, கருப்பாயி ஆகியோர் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அங்குள்ள சுடுகாட்டில் எரித்து விட்டனர். இதுகுறித்து அத்திப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் சாப்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து முனியாண்டி, தங்கமுடி, ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story