சாராய கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்; சாராய பாக்கெட்டுகளையும் சாலையில் போட்டு உடைத்தனர்


சாராய கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்; சாராய பாக்கெட்டுகளையும் சாலையில் போட்டு உடைத்தனர்
x

நாகை அருகே சாராய கடையை பெண்கள் அடித்து நொறுக்கினர். சாராய பாக்கெட்டுகளையும் சாலையில் போட்டு உடைத்தனர்.

நாகை,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் சில ஆண்டுகளாக தனது வீட்டில் கூரை கொட்டகை அமைத்து சாராயம் விற்று வந்தார்.

இங்கு வந்து சாராயம் குடித்துவிட்டு செல்பவர்களால் அந்த பகுதி பெண்கள் தினமும் சிரமப்பட்டு வந்தனர். பொது இடத்தில் சாராய விற்பனை செய்வதாக வலிவலம் போலீஸ் நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தனர்.

அடித்து நொறுக்கினர்

ஆனால் இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று சாராயம் விற்பனை செய்து வந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கினர். மேலும் அவரது வீட்டிற்குள் புகுந்து உள்ளே இருந்த சாராய பாக்கெட்டுகள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாராய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story