அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரம்
வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆவணப்படுத்த முயற்சி
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் கிடைத்து வரும் பொருட்களை சுத்தம் செய்தல், புகைப்படம் எடுத்தல், வரைபடம் தயாரித்தல் உள்ளிட்ட ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை கேரளா, தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் பயிற்சி பெறும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். மேலும் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வில் நீர் கிண்ணம், சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், உள்பட 2,780 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
4 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
மேலும் முதல்கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சியை விருதுநகர் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். மாணவ-மாணவிகளுக்கு கண்காட்சி பற்றியும், தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு குறித்த சந்தேகங்களுக்கு தொல்லியல் இயக்குனர் பொன் பாஸ்கர் விளக்கம் அளித்தார்.
மேலும் கண்காட்சியினை இதுவரை 4 ஆயிரத்திற்கும் ேமற்பட்டவர்கள் பார்வையிட்டதாக அவர் தெரிவித்தார்.